5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை… காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை

காஷ்மீர்:
காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் குல்கம் மாவட்டம் கெல்லம் தேவ்சர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடலை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், ஏராளமானோர் அங்கு கூடினர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்கினர். இதில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!