5 மாநில சட்டசபை தேர்தல்… ஒன்றில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு

புதுடில்லி:
நடைபெற போகும் 5 மாநில தேர்தலில் ராஜஸ்தானில் மட்டும் காங்., ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது.

ஐந்து மாநில தேர்தல்களில் ராஜஸ்தானில் காங். ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் வாயிலாக தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷகர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை கடந்த 6-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடக்கிறது. இதில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் பா.ஜ. வெற்றிபெறும், எனவும், ராஜஸ்தானில் காங். வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏ.பி.சி. மற்றும் சி.வோட்டர்ஸ் டைம்ஸ்நவ், வார்ரூம்,,டெஜிஸ், இணைந்து நடத்திய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளதாவது:
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 இடங்களில் காங். 115 இடங்களிலும், பா.ஜ. 75 இடங்களிலும் வெற்றி பெறும்.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 இடங்களிலும் பா.ஜ. 142 இடங்களிலும், காங். 72 இடங்களிலும், வெற்றி பெறும்.
சத்தீஷ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ. 49 தொகுதிகளிலும் காங். 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!