5 மாநில தேர்தலில் பாஜவுக்கு சாதகமான முடிவுகள் வரும்… அமித்ஷா தகவல்

புதுடில்லி:
நடந்து முடிந்துள்ள 5 மாநில தேர்தல்களில் பாஜவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்று பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

இந்தி நாளிதழ் ஒன்றின் நிகழ்ச்சி டில்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது:

வரும் 2019 -ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரே பா.ஜ. தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அதுவரை தற்போது உள்ள நிர்வாகிகள் அதே பொறுப்பில் தொடர்வர் என்றார்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நீங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு எனக்கு முன்பாக பிரதமர் வேட்பாளராக 15 மூத்த தலைவர்கள் உள்ளனர். அப்படி அறிவிப்பு வர வாய்ப்பில்லை. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.வுக்கு சாதகமான முடிவு வரும் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!