5 மாநில தேர்தல் முடிவுகள் ஸ்டாலின், ரஜினி, கமல் என்ன சொல்றாங்க!!!

சென்னை:
ராஜஸ்தான் உட்பட 5 மாநில தேர்தல்கள் முடிவுகள் பற்றி பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி., தேர்தல் முடிவுகளுக்காக காங்., தலைவர் ராகுலுக்கு , திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தேர்தல் வெற்றி பா.ஜ.,வுக்கு எதிராக மெகா கூட்டணியை மேலும் பலப்படுத்தும் என்றார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.,விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. தனது செல்வாக்கை பா.ஜ., இழந்துள்ளது’ என்றார்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ‘தேர்தல் முடிவுகள் புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்களின் தீர்ப்பு இது’, என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!