5-வது பெரிய அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் உருவாகும் – அமெரிக்க அறிக்கை

5-வது பெரிய அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் உருவாகும் என அமெரிக்க அறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் பாக்கிஸ்தானின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ’ பாக்கிஸ்தானிய அணு ஆயுதங்கள் 2018 ‘ என்ற தலைப்பில் ஹான்ஸ் எம் கிறிஸ்டன்சன், ராபர்ட் எஸ் நோரிஸ், ஜூலி டைமண்ட் ஆகியோர் அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, “ பாக்கிஸ்தானில் தற்போது 140 முதல் 150 வரை அணு ஆயுதங்கள் உள்ளன. தொடர்ந்து அந்த நாடு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தால் 2025ம் ஆண்டிற்குள் 220 முதல் 250 வரை அணு ஆயுதங்கள் வைத்திருக்க கூடும். பாக்கிஸ்தான் ராணுவ தளங்களில் உள்ள சாட்டிலைட் படங்கனை அடிப்படையாக கொண்டே நாங்கள் இதனை தெரிவித்துள்ளோம்.

இது நடந்து விட்டால் உலகின் 5வது பெரிய அணு சக்தி நாடாக பாக்கிஸ்தான் மாறி விடும். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அணு ஆயுத வளர்ச்சியை பொறுத்துஏ பாக்கிஸ்தான் தனது நாட்டின் அணுகுண்டுக்கள் கையிருப்பை அதிகரிக்கும் “ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sharing is caring!