6 அடி உயரத்தில் ஆஸ்திரேலிய பசு… வைரலாகும் படம்

ஆஸ்திரேலியா:
இவ்வளள…ளளவு பெரிய பசுமாடா என்று அனைவரும் ஆச்சரியத்துடன் வியந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பசு மாடு ஒன்று சுமார் 6 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

WWE போட்டியில் கிரேட் காளியை அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அவரது உயரத்தையும் நீங்கள் மறக்கமுடியாது. அதாவது சுமார் 7.1 அடி உயரம் கொண்ட அவர் நம்மை எல்லாம் தலை நிமர்ந்து பார்க்க வைத்து விடுவார்.

மனிதர்களின் உயரம் தான் இப்படி நம்மை ஆச்சரிப்படுத்துகிறது என்றால் விலங்குகளின் உயரம் பலரை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள பசு ஒன்று சுமார் 6 அடி உயரம் வளர்ந்துள்ளது.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பசுவிற்கு அதன் உரிமையாளர் “கினிக்கர்ஸ்” என பெயரிட்டுள்ளார்.

பசுவின் இந்த வளர்ச்சி அதன் வாழ்நாளையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இத்தாலியை சேர்ந்த பசு ஒன்று சுமார் 6.4 அடி உயரம் வரை வளர்ந்திருந்தது. உலகில் உயரமான பசு இது தான் என கூறப்
படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!