6 மாதத்தில் அகற்றணும்… ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி

மதுரை:
அகற்றணும்… 6 மாதத்தில் அகற்றணும்… என்று ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பை 6 மாதங்களில் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்யாண சுந்தரம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, கோவில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்ற வேண்டும். கோவில் சொத்து விவரங்களை விளம்பர பலகை போல வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!