7 பேரையும் விடுதலை செய்யலாம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இந் த நிலையில், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவல் தவறு என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், 7 பேர் விடுதலை விவகாரம் சிக்கலான ஒன்று என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குகளில் சிக்கி கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிப்பது குறித்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, கடந்த வாரம் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில், இது தொடர்பான கோப்பை மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக அவர்கள் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், அரசியல் அமைப்பு ரீதியாகவும், சட்டத்திட்டத்திற்கு உட்பட்டும் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்றும், ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு பரிந்துரைத்துள்ள ஆவணங்கள் கவனமாக பரிசீலிக்கப்படும் என்றும், 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான முடிவு எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Sharing is caring!