7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் மீண்டும் கடிதம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு பரிந்துரைசெய்து, தமிழக அரசினால் ஆளுநருக்கு அனுப்பட்டது.

எனினும், இது குறித்து ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இதுவரை எவ்விதத் தீர்மானத்தையும் வௌியிடவில்லை.

இந்நிலையில், குறித்த 7 பேரை விடுதலைசெய்யும் விவகாரம் தொடர்பில் நினைவூட்டல் கடிதத்தை தமிழக அரசு அனுப்பியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

7 பேரை விடுவிக்க, தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்திவதற்கு ஆளுநர் காலஅவகாசம் எடுத்துக்கொள்ள, சட்டத்தில் இடமில்லை என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

இதனிடையே, தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் காணப்படுமாயின், ஆளுநர் செயல்பட இயலாது என்ற காரணத்தை காட்ட வழியில்லை என்பதை பல்வேறு வழக்குகளையும் மேற்கோள்காட்டி தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், மாநில அமைச்சரவை முடிவெடுத்ததன் பின்னர், ஆளுநரின் தனிப்பட்ட முடிவுக்கு இடமில்லை எனவும் தமிழக அரசு அரசியல்சாசனப் பிரிவுகளை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பியுள்ளதாகவும் ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Sharing is caring!