7.5 ரிக்டர் நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் தளர்த்தப்பட்டுள்ளது

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் மீண்டும் பதிவாகிய 7.5 ரிக்டர் நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் தளர்த்தப்பட்டுள்ளது.

சுலவெசி தீவில் முதலில் 6.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியது. அதனையடுத்து 7.5 ரிக்டர் அளவில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, சுலவெசி தீவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறிது நேரத்தின் பின்னர் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இதேவேளை, முதலில் பதிவாகிய நிலநடுக்கத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு வானிலை மற்றும் புவிச்சரிதவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!