75 வீடுகளிலாவது திருடியிருக்கலாம் என சந்தேகப்படும் இரு இளம் பெண்கள் காவல்துறையினரால் கைது
குறைந்தது 75 வீடுகளிலாவது திருடியிருக்கலாம் என சந்தேகப்படும் இரு இளம் பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, லியோன் நகரின் இரண்டாம் வட்டாரத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 75 வீடுகளுக்கு மேல் திருடியுள்ளனர். கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர், 2 ஆம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திருடியுள்ளனர். இத்தகவலை அறிந்துகொண்ட காவல்துறையினர் கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். அதன் பின்னர் அவர்கள் வெளியேறும் போது காவல்துறையினர் வளைத்து பிடித்துள்ளனர். மொத்தம் 20 காவல்துறையினர் வரை இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆறு மாத காலமாக காவல்துறையினர் இவ்விரு பெண்களையும் பின் தொடர்ந்துள்ளனர். லியோனின் இரண்டாம் மற்றும் ஆறாம் வட்டாரங்களில் சில நாட்கள் இடைவெளிகளில் தொடர்ச்சியாக திருடிக்கொண்டே இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளனர்.