8 இஸ்லாமிய நாட்டினருக்கு டிரம்ப் விதித்த தடை செல்லும்

இஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் வருபவர்களுக்கு டிரம்ப் அரசு விதித்த தடை செல்லும் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றவுடன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார், இஸ்லாமிய நாடுகளான ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், வடகொரியா, வெனிசுலா, சாத் ஆகிய 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதித்தார்.

இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் டிரம்ப் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தனர்.

‘‘அமெரிக்காவின் பாதுகாப்பு மீது அரசு காட்டிய அக்கறை நியாயமானது. அரசின் கொள்கையில் எந்தவிதமான எதிர்ப்பும் நாங்கள் தெரிவிக்கவில்லை’’ என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 8 நாடுகளை சேர்ந்தவர்கள் மீதான தடை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

Sharing is caring!