ரொறன்ரோவில் முதியோர் காப்பகம் ஒன்றில் 81 பேர்கள் கொரோனாவால் மரணம்!

ரொறன்ரோவில் முதியோர் காப்பகம் ஒன்றில் 81 பேர்கள் கொரோனாவால் மரணமடைந்தன் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

கனடாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நாட்களில், சுகாதாரத்துறை அதிகாரிகள் காப்பகங்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கிய்யிருந்தனர்.

முதியோர் இல்லங்களில் கண்டிப்பாக உயிர் காக்கும் அறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதில் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகும் முதியவர்களை தனிமைப்படுத்தவும் வலியுறுத்தி இருந்தனர்.

இதே ஆலோசனைகளை ரொறன்ரோவில் 81 முதியவர்கள் மரணமடைந்த காப்பகத்திற்கும் வழங்கியிருந்தனர். இந்த ஆலோசனைகளை காப்பக நிர்வாகம் உதாசீனம் செய்ததாலையே இறப்பு எண்ணிக்கை அதிகரித்ததாக தெரிய வந்துள்ளது.

2020 டிசம்பர் 4ம் திகதி முதல் கொரோனா பரவல் துவங்கியுள்ள நிலையில், டிசம்பர் 11ம் திகதியே ரொறன்ரோவின் Tendercare முதியோர் காப்பகத்திற்கு மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

மேலும், அந்த கட்டிடத்தின் நான்காவது மாடியை கொரோனா தனிமைப்படுத்தல் தளமாக பயன்படுத்த முன்வைத்த ஆலோசனையும் கண்டுகொள்ளப்படவில்லை.

ஆனால் தங்களிடம் போதிய ஊழியர்கள் இல்லை என மட்டும் தெரிவித்துள்ளது Tendercare முதியோர் காப்பகம்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றியிருந்தால் Tendercare காப்பகத்தில் பேரிழப்பு ஏற்பட்டிருக்காது என்றே தெரிய வந்துள்ளது.

Sharing is caring!