92 இராணுவ வீரர்கள் படுகொலை.!! ஜனாதிபதி வேதனை

போக்கோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 92 சாட் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 47 பேர் காயமுற்றனர் என அந்நாட்டின் ஜனாதிபதி இட்ரிஸ் டெபி கூறினார்.

சாட், நைஜீரியா மற்றும் நைஜர் ஆகிய படைகள் பல ஆண்டுகளாக இஸ்லாமிய போராளிகளுடன் போராடி வரும் நாட்டின் மேற்கில் உள்ள போமா தீவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நான் பல நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால் வரலாற்றில் ஒருபோதும் ஒரே நேரத்தில் இதுபோன்று பல வீரர்களை இழந்ததில்லை என்று தாக்குததல் நடந்த தளத்திற்கு விஜயம் செய்தபோது டெபி கூறினார்.

2009ல் வடகிழக்கு நைஜீரியாவில் வெடித்த போக்கோ ஹரம் கிளர்ச்சியில் இதுவரை 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 2 மில்லியன் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மாலி, புர்கினா பாசோ மற்றும் மேற்கு நைஜர் ஆகிய பகுதிகளில், அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த போக்கோ ஹரம் போராளிகள் தங்கள் இருப்பை விரிவுபடுத்தி, கடந்த ஆறு மாதங்களில் நூற்றுக்கணக்கான வீரர்களைக் கொன்றுள்ளனர்.

Sharing is caring!