சட்டசபை தேர்தல் தேதி மார் முதல்வாரத்தில் அறிவிக்கப்படலாம்; பிரதமர் கணிப்பு

பிரதமர் மோடி கணிப்பு… 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி மார்ச் 7 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என்று பிரதமர் மோடி கணித்துள்ளார்.

அசாம் மாநிலம் சிலபதாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இந்தியன் ஆயில் பொங்கைகான் சுத்திகரிப்பு ஆலையின் இந்த்மாக்ஸ் யூனிட், மதுபானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் செகண்டரி டேங்க் பார்ம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் பேசிய அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது மார்ச் 4 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்த முறை மார்ச் 7 ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கலாம் என்று தாம் அனுமானிப்பதாக அவர் கூறினார்.

தேர்தல் தேதி அறிவிக்கும் வரை, 5 மாநிலங்களுக்கும் முடிந்த வரை தாம் செல்ல இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Sharing is caring!