சூடானிய எதிர்ப்பு போராட்டங்களில் 15 பேர் உயிரிழப்பு

சூடானில் இராணுவக் கிளர்ச்சிக்கு எதிரான போராட்டங்களின் போது குறைந்தது 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவ ஆட்சிக்கு எதிராக ஒரு மாதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில், நேற்றைய தினம் கறைபடிந்த தினமாக அமைந்துள்ளதாக சூடானிய சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Sharing is caring!