பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட விமானம்! நடுவானில் மகன் கண்முன்னே உயிரிழந்த தந்தை: நடந்தது என்ன?

பிரித்தானியாவில் இருந்து விடுமுறைக் கழிப்பதற்காக விமானத்தில் பறந்த நபர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் இருந்து மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் 84 வயது மதிக்கத்தக்க முதியவர் Ryanair விமானநிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்தில், மான்செஸ்டரில் இருந்து ஸ்பெயினின் Malaga-விற்கு சென்றுள்ளார்.

விமான புறப்பட்டு, 35000 அடி தூரத்தில் பறந்து கொண்டிருக்க, விமானத்தில் ஏறிய பின் சுமா, ஒரு மணி நேரமாக அவரிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லாத காரணத்தினால், உடனடியாக விமான ஊழியர்கள் அவரை சோதனை செய்தனர்.

அப்போது உடனடியாக விமானத்தில் மருத்துவ பின்னணி கொண்ட பயணிகள் யாரேனும் இருந்தால் உடனடியாக முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது, அதைத் தொடர்ந்து விமான ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அப்போது மருத்துவ பயிற்சி பெற்ற Emma Gaskell மற்றும் ஒரு செவிலியர் அவரைக் காப்பாற்ற உதவியுள்ளனர். ஆனால், அவரை சோதித்து பார்த்த போது, இதயதுடிப்பு இல்லை என்பது தெரியவந்ததால், உடனடியாக விமான ஊழியர்கள் மற்றும் அவர்களும் சேர்ந்து CPR முறையை, சுமார் 25 நிமிடங்கள் செய்துள்ளனர்.

ஆனால் எந்த ஒரு முயற்சியும் பலன் அளிக்காத காரணத்தினால், விமான உடனடியாக அருகில் இருந்து பிரான்சின் Nantes விமானநிலையத்தில் தரையிரக்கப்பட்டது.

அதன் பின் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர் உயிரிழந்துவிட்டார் என்பது தெரியவந்தது. விமானத்தில் மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் விடுமுறையை கழிக்க ஸ்பெயின் புறப்பட்ட நிலையில், அவர்கள் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமான இந்த சம்பவத்திற்கு பின் இறுதியாக அதிகாலை 3 மணிக்கு Malaga-வில் தரையிறங்கியது.

Sharing is caring!