கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 239 பேர் உயிரிழந்தனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கர்நாடகாவில் புதிதாக 44,438 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,46,303-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 239 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,250-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,901 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 11,85,299-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 4,44,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Sharing is caring!