கடல்வழியே படகில் செல்வோரை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு

பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு…கியூபாவில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்கு ஆதரவாக அமெரிக்காவில் இருந்து கடல்வழியே படகில் செல்வோரைத் தடுக்கும் வகையில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கியூபாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உணவுப் பொருட்கள், இன்றியமையாப் பொருட்கள் தேவையான அளவு கிடைக்கவில்லை எனக் கூறிப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள கியூபா நாட்டவர் படகில் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்க கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!