மேற்குவங்க முதலமைச்சராக மூன்றாம் முறையாக நாளை பதவியேற்கும் மம்தா

3ம் முறையாக முதலமைச்சராகிறார்… மேற்கு வங்க முதலமைச்சராக மூன்றாம் முறையாக நாளை புதனன்று மம்தா பானர்ஜி பதவியேற்க உள்ளார்.

மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் 213 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் ஆயிரத்து 736 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. அப்போது சட்டமன்றக் குழுத் தலைவராக மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்துப் புதனன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்றாம் முறையாக முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவியேற்க உள்ளார்.

Sharing is caring!