பிரித்தானியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர் செய்த செயல்…!!

பிரித்தானியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபரை பிரித்தானியர்கள் திட்டித் தீர்க்கிறார்கள். அப்படி என்ன செய்துவிட்டார் என்பதற்காக பிரித்தானியர்கள் கொந்தளிக்கிறார்கள்? G7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரித்தானியாவுக்கு வந்துள்ளார்

. இந்நிலையில், வட அயர்லாந்துக்கு மாமிசம் அனுப்புவது தொடர்பில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஒரு பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது.

அது குறித்து பேசிய ஜோ பைடன், இந்த பிரச்சினை தொடர்பில் பிரித்தானியா பொறுமை காக்கவேண்டும் என்றும், சமரசம் செய்துகொள்ளும் நிலை வந்தாலும் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

அமெரிக்கா பிரித்தானியாவின் நட்பு நாடாக இருந்துகொண்டு அதற்கு ஆதரவாக பேசாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவாக பேசியதால் பிரித்தானியர்கள், குறிப்பாக பிரெக்சிட் ஆதரவாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

ஜோ பைடனின் மறதியை குத்திக்காட்டும் வகையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அமெரிக்கா தனது கூட்டணி நாடுகள் எவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக ஜோ பைடன் ஒரு மறதி ஆசாமி, ஆகவே, பிரித்தானியா அமெரிக்காவின் நட்பு நாடு என்பதைச் சொன்னாலும் அது அவருக்கு நினைவில் இருக்கப்போவதில்லை என்று நக்கலாக கூறியுள்ளார்.

வட அயர்லாந்தில் கனன்றுகொண்டிருக்கும் பதற்றத்தை தூண்டி விடுவதாக ஜோ பைடன் போரிஸ் ஜான்சன் மீது குற்றம் சாட்டியதால் பிரித்தானியர்கள் ஜோ பைடன் மீது கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

Sharing is caring!