அக்யூட்டு நம்பர் 1 ஆக மாறிய நடிகர் சந்தானம்

சென்னை:
அக்யூட்டு நம்பர் 1 ஆக மாறி உள்ளார் நடிகர் சந்தானம். அட இது அவர் நடிக்கும் படத்தின் தலைப்புங்க.

தில்லுக்கு துட்டு 2 படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு அக்யூஸ்டு நம்பர்-1 என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `தில்லுக்கு துட்டு 2′ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது நடிப்பில் அடுத்ததாக `சர்வர் சுந்தரம்’, `ஓடி ஓடி உழைக்கணும்’, `மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.

இந்நிலையில், சந்தானத்தின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜான்சன்.கே இயக்கும் இந்த படத்திற்கு ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1) என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தாரா அலிசா பெர்ரி நடிக்கிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!