அசத்திய காஜல்

பாரிஸ் பாரிஸ் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் காஜல்அகர்வால். அதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட காஜல், 10 கிமீட்டர் தூரத்தை 70 நிமிடங்களில் தான் கடந்ததாகவும், கடந்த ஆண்டை விட 8 நிமிடங்கள் குறைவாக இந்த தூரத்தை தான் கடந்திருப்பதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு 21 கிலோ மீட்டர் தூரம் வரை தான் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், இந்த போட்டியில் கலந்து கொள்ள பலர் தனக்கு உந்து சக்தியாக இருந்ததாகவும் தெரிவித்திருப்பவர், அவர்கள் ஒலிம்பிக்கில் சாதனை செய்ய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sharing is caring!