அசுரன் படத்தின் கருணாஸ் மகன்… படப்பிடிப்பு தளத்தின் படம் வெளியீடு

சென்னை:
தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் கருணாஸின் மகன் கென் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படம் தற்போது வெளியாகி உள்ளது.

கருணாஸ்-தனுஷ் இருவரின் நடிப்பில் யாரடி நீ மோகினி, திருடா திருடி, பொல்லாதவன் போன்ற படங்கள் வந்துள்ளது. இதில் யாரடி நீ மோகினியில் ஒரு போன் பூத் காமெடி ரசிகர்களிடம் அதிகம் பிரபலம். இப்போது தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் கருணாஸின் மகன் கென் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் அசுரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கென்னின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவருடைய லுக்கும் வெளியாகியுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!