அசுரன் படத்தில் வடிவேலு… தகவல்களால் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை:
அசுரன் படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக எழுந்துள்ள தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

மாரி-2 படத்திற்கு அடுத்ததாக அசுரன் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக பேச்சுகள் எழுகின்றன. படப்பிடிப்புக்காக தனுஷ் மதுரை ஏர்போர்ட்டிற்கு வந்தார்.

அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் வடிவேலும் அங்கு வந்திருந்தார். மேலும் வடிவேலும் ரசிகர்களை போல் தனுஷ்க்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வடிவேலு நடிக்கிறாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!