அஜித்தின் அடுத்தப்படம் இந்தி படத்தின் ரீமேக்… கோலிவுட்டை உலா வருது செய்தி…!

சென்னை:
இந்தி படத்தின் ரீமேக் படம்தான் அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அஜித் எப்போதும் ஒரு படத்தில் நடிக்கும் போது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஆனால் அஜித் விசுவாசம் படத்திற்கு பிறகு வினோத்துடன் இணைய இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன. இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு நிறுவனத்தில் அஜித் படம் நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது.

அவருடன் மற்றொரு பெரிய நிறுவனமும் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனராம். அவர்களிடம் ஒரு பாலிவுட் ஹிட் படத்தின் ரீமேக் உரிமை இருக்கிறதாம். அந்த படத்தின் ரீமேக்கில் தான் அஜித் அடுத்து நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் உலா
வருகின்றன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!