அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்கும் இயக்குனரின் மகள்

சென்னை:
பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் அஜித்தின் அடுத்த படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அஜித் நடித்து முடித்துள்ள விஸ்வாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியில் அமிதாப் பச்சன்-டாப்ஸி நடத்த பிங்க் என்ற படத்தின் ரீமேக் தான் இது. நடிகை நஸ்ரியா இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றில் கல்யாணி நடிப்பார் என்று கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!