அஜித்துடன் இணையும் இசையமைப்பாளர்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பாலிவுட்டில் ஹிட் அடித்த “பிங்க்” படத்தின் ரீமேக்கான “நேர்கொண்ட பார்வை”  திரைப்படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய போனி கபூர் தயாரித்து வருகிறார்..

இத்திரைப்படத்தில் வித்யாபாலன், ஷ்ரத்தாஸ்ரீநாத், ஆன்ட்ரியா, அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிசந்தரன், டில்லி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஆகஸ்ட் 10-ல்  ரிலீஸ் செய்யப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்  அறிவித்துள்ளார்.

இந்நிலையில் “அஜித்தின்  அடுத்த படத்திற்கு தன்னை இசையமைக்க அஜித் சொன்னதாக” கிப்ரான் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  அதில் அஜித்துடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ள கிப்ரான், அந்த உண்மையான தருண‌த்தில், ஒரு குரல் கேட்டது, அது அஜித்தின் குரல் , அவர் கூறினார் இருவரும் ஒன்றாக வேலை செய்வோம்” என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!