அஜித்துடன் 5 வது முறையாக இணைந்தால் வரம்… இயக்குனர் சிவா பெருமிதம்

சென்னை:
ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணைந்தால் அது வரம் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் சிவா.

அஜித் – சிவா கூட்டணியில் இதுவரை ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்,’ ‘விஸ்வாசம்’ ஆகிய 4 படங்கள் உருவாகியுள்ளது. இதில், ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே செம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சிவா ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:  அஜித்துடன் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அஜித் ஒரு நல்ல மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து 4 படங்களை இயக்கியதில், சந்தோஷம். ஐந்தாவதாக மேலும் ஒரு படத்தில் இணைந்தால் அது வரம்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!