அஜித் நடித்த குறும்படம் இணையத்தில் வைரல்

சென்னை:
அஜித் நடித்த குறும்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாக உலா வந்து கொண்டு இருக்கிறது.

அஜித் முதன்முதலாக நடித்த குறும்படத்தின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. தமிழ் சினிமாவின் ரசிகர்களின் உயிர்மூச்சாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடித்த படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்கள் திருவிழாகோலம் போல் காட்சியளிக்கும்.

இந்நிலையில் தற்போது அஜித் முதன்முதலாக நடித்த குறும்படம் என்று கூறி இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்வதற்காக இளம் வயதில் காட்சியளிக்கும் நடிகர் அஜித் பைக் ரேஸில் ஜெயிக்கவேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட ரேசில் ஈடுபடுகிறார். இந்த குறும்படமாக தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!