அஜித் படத்தில் இணைந்த நடிகர் டெல்லி கணேஷ்

சென்னை:
அஜித்தின் பிங்க் ரீமேக் படத்தில் டெல்லி கணேசும் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அஜித் நடித்து வரும் ‘பிங்க்’ ரீமேக் படமான ‘தல 59’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித் மனைவியாக வித்யாபாலன் மற்றும் முக்கிய கேரக்டர்களில் ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் மூன்று முக்கிய பெண் கேரக்டர்களில் ஒருவரின் தந்தையாக பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த ‘ஜனா’, ‘பகைவன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!