அஜித் படம் இந்தி சேனலில் வெளியாகி டிஆர்பி எகிறியது

சென்னை:
அஜித் படத்தை போட்டு டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது இந்தி சேனல். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகி உள்ளது.

விஜய்-அஜித் படங்களுக்கு எப்போதுமே சவால்கள் இருக்கும். அவர்களுக்குள் இல்லை என்றாலும் ரசிகர்களே அதை ஏற்படுத்துவார்கள். இதுநாள் வரை கில்லி பிரபல தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. முதல் இடத்தில் இருக்கிறது என்று கூறப்பட்டது.

இப்போது அஜித்தின் விவேகம் படம் தமிழை தாண்டி பாலிவுட் வரை சென்று சாதனை செய்துள்ளது. இந்தியில் பிரபல தொலைக்காட்சியில் முதன்முறையாக அஜித்தின் விவேகம் படம் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது மட்டும் அந்த தொலைக்காட்சிக்கு 94% பார்வையாளர்கள் அதிகமாகியுள்ளார்களாம்.

டிஆர்பி ரேட்டிங்கில் இது புதிய சாதனை என்கின்றனர். இதற்கான ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!