அஜித் – ஹாலிவுட் நடிகர்… ஒப்பிட்டு உலா வரும் படம்

சென்னை:
ஹாலிவுட் நடிகர் போல் அஜித் இருக்கிறார் என்று ஒரு படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விஸ்வாசம் பிரமாண்ட வெற்றியை அடைந்தது. தொடர்ந்து அஜித் பாலிவுட் படமான பிங்க் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படம்
மே 1ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் அஜித் சமீபத்தில் படப்பிடிப்பிற்கு செல்லும் இடத்தில் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதில் அஜித் ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன் போல் இருப்பதாக இரண்டையும் ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!