அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகும் நடிகர் தனுஷ்

சென்னை:
அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார் நடிகர் தனுஷ்.

வட சென்னை படத்திற்கு பிறகு தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி உள்ளார். தயாரிப்பாளர் தாணு மட்டுமே தனுஷை வைத்து மூன்று படங்கள் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

அதோடு, பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் ராம்குமார் இயக்கும் ஒரு படம், தனுஷே இயக்கும் ஒரு படம் என லிஸ்ட் நீள்கிறது.

ஆனால், இவரது நடிப்பில் படமாக்கப்பட்டுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை. அடுத்த 2 ஆண்டுகள் எப்படியும் தனுஷை அடிக்கடி திரையில் பார்க்க முடியும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!