அடுத்ததாக சூர்யா-ஹரி கூட்டணி படத்தை தயாரிக்கிறதா சன் பிக்சர்ஸ்?

சென்னை:
அடுத்ததாக சன் பிக்சர் நிறுவனம் சூர்யா – ஹரி படத்தை தயாரிக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தையும், ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் பேட்ட படத்தையும்  சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள பேட்ட படத்திற்கு பிறகு இந்நிறுவனம் சூர்யா – ஹரி இணையவுள்ள படத்தை தான் தயாரிக்கவுள்ளதாம். தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணி எனப்படும் இவர்களது கூட்டணியில் வெளிவந்த சிங்கம் தொடர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் இந்த படம் சிங்கம் தொடர்ச்சி இல்லையாம். முற்றிலும் மாறுபட்ட கதை. மேலும் இவர்கள் கூட்டணியில் உருவான சிங்கம் முதல் பாகத்தின் திரையிடும் உரிமையை சன்பிக்சர்ஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!