அடுத்த எதிர்பார்ப்பு மோர்ட்டல் என்ஜின்ஸ்

ஹாலிவுட் படங்களில் அடுத்த எதிர்பார்ப்பு மோர்ட்டல் என்ஜின்ஸ். தி லார்ட்ஸ் ஆப் ரிங்ஸ்சின் 3 பாகங்கள், கிங்காங், தி ஹாப்பிட், தி டிராகன் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய கிரிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கி உள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. ஹகோ வேவிங், ஹிலா ஹில்மர், ரோபர்ட் ஷீலன், ஜிஹே, ரோகன் ரப்ட்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜுங்கி இசை அமைத்துள்ளார், சிமன் ரெபி ஒளிப்பதிவு செய்துள்ளார். யுனிவர்செல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த மாதம் வெளிநாடுகள் சிலவற்றில் வெளியானது. இந்தியா உள்பட மேலும் பல நாடுகளில் நாளை வெளியாகிறது. தமிழில் டப் செய்யப்பட்டு ஒரு அற்புத உலகம் என்ற தலைப்பில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இது ஒரு சயின்ஸ் பிக்சன் படம். பூமியில் நடக்கும் சில மாற்றங்கள் காரணமாக இப்போதுள்ள அனைத்து நிலைகளிலும் மாற்றம் வருகிறது. பூமி வேகமாக சுற்றுகிறது. லண்டன் நகரமே ஒரு சக்கரம் போல் சுழல்கிறது. என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்கிறார்கள்.

இந்த நேரத்தில் சூப்பர் பவர் கொண்ட பெண்ணாக ஹிலா ஹில்மர் வந்து அதனை எப்படி சரி செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. பிரமாண்ட அரங்குகள், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளால் மிரட்டும் படம்.

Sharing is caring!