அடுத்த குற்றச்சாட்டு… ஆபாச கவிதை கூறினாராம் வைரமுத்து

சென்னை:
ஆபாசமான கவிதை கூறினார் வைரமுத்து என்று ஒரு பெண் அடுத்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
வைரமுத்து மீது பல்வேறு பெண்கள் தொடர்ந்து பாலியல் புகார்கள் கூறிவருகிறார்கள். சின்மயி மட்டுமின்றி அவர் வேறு சில பெண்களிடமும் தவறாக நடந்துகொண்டார் என வரிசையாக புகார்கள் குவிந்து கொண்டே வருவதால் அதிர்ந்துதான் போய் உள்ளது கோலிவுட்.

இந்நிலையில் தற்போது பெண் ஒருவர் கூறியுள்ள புகாரில் வைரமுத்து ஆட்டோகிராப் கேட்கவந்த பெண்ணிடம் போன் நம்பர் வாங்கி ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் ஆபாசமாக ஒரு கவிதையையும் கூறியுள்ளார்.

“உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை” என கவிதை சொன்னாராம் வைரமுத்து. இந்த வீடியோதான் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!