அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்

தமிழ் சினிமாவில் யாருடைய படங்கள் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ, அஜித் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகி வெற்றியும் பெற்று வருகிறது.

இப்போது கூட விவேகம் படம் Commando என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. அங்கு இருக்கும் அஜித் ரசிகர்கள் படத்தை ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர்.

படம் கன்னடத்தில் வெற்றிபெற்றிருக்கிறது என்ற வந்த செய்தியால் ரசிகர்கள் ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அது என்னவென்றால் கடந்த 2014ம் ஆண்டு வீரம் படம் கன்னடத்தில் வெளியானது. படத்தை கன்னடத்தில் விநியோகம் செய்த கே. மஞ்சு ஒரு பேட்டியில், படத்தின் முதல் நாளே நல்ல வரவேற்பு வந்துள்ளது. படத்தின் வரவேற்பு வைத்து பார்க்கும் போது கன்னடத்தில் ரஜினியை அடுத்து சூப்பர் ஸ்டார் என்றால் அஜித் தான். தமிழ் படங்களை கடந்த சில வருடங்களாக பார்த்து வருகிறேன், இங்கு ரஜினி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை போலவே அஜித்திற்கு கிடைக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Sharing is caring!