அடுத்த தீபாவளிக்கு நேருக்கு நேர் மோதும் விஜய் – இயக்குனர் ஷங்கர்

சென்னை:
அடுத்த தீபாவளிக்கு இந்தியன் 2 மற்றும் விஜய்யின் புதிய படம் மோதலாம் என்கிறார்கள்.

இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க இந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களும் வெயிட்டிங். அப்படியிருக்க ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்தவர் விஜய்.

இந்த கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என பலரும் காத்திருக்கின்றனர், அப்படியிருக்க இவர்கள் இருவரும் மோதும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

ஷங்கர் இயக்கும் இந்தியன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்க, படத்தை அடுத்த வருட தீபாவளிக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். அதே நாளில் தான் விஜய்-அட்லீ படமும் வரவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஷாக் தான்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!