அடுத்த படத்திலும் கூட்டணி சேர்ந்தார்கள் அனுராக் – டாப்சி

மும்பை:
மன்மரிஜியான் படத்தை அடுத்து மீண்டும் ஒரு படத்தில் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் நடிக்க உள்ளார நடிகை டாப்சி.

தெலுங்கு, இந்தி பட உலகில் மிக பிரபலமாகி வரும் டாப்சி, அடுத்ததாக பிரபல இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார்.

அனுராக் கஷ்யப் இயக்கத்தில் டாப்சி நடித்த மன்மர்ஜியான் படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், மீண்டும் இருவரும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளனர். திரில்லர் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.

இதுகுறித்து டாப்சி தெரிவித்துள்ளதாவது:

“மன்மர்ஜியான் படத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தைத் தொடர்ந்து மீண்டும் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் நான் பணிபுரிவேன் எனக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால் அது இவ்வளவு விரைவாக நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படத்துக்காக நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை அஜுர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சுனிர் கெதெர்பால் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பிடப் படவில்லை. 2020ஆம் ஆண்டில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்துக்கு லொக்கே‌ஷன் தேடும் பணிகளில் அனுராக் கஷ்யப் பிஸியாக இருக்கிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!