அடுத்த படம்… அடுத்த படம்… அசுரன்… தனுஷ் அறிவிப்பு

சென்னை:
அடுத்த படம்… அடுத்த படம்… அசுரன்… தனுஷ் நடிக்கும் படம் இதுதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரி 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ், வெற்றி மாறன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் நடிகர் தனுஷ். இது குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ரசிகர்களிடமிருந்து மாரி 2 படத்தின் வெற்றி செய்தி வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, எனது அடுத்த படம் குறித்து இப்போது அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடிக்கிறேன். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!