அடுத்த படம் அறிமுக இயக்குனர் இயக்கத்தில்… ஜோதிகா பரபர

சென்னை:
காற்றின் மொழி படத்திற்கு பின்னர் அறிமுக இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் ஜோதிகா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரு காலத்தில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் ஜோதிகா. இவரது நடிப்பு திறமையால் பல படங்களில் பாராட்டை வாங்கியவர்.

நன்றாக நடித்து வந்த நிலையில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அவ்வளவு தான் இதோடு சினிமாவுக்கு வரமாட்டார் என நினைத்திருந்த நேரத்தில் 36 வயதினிலே படம் வாயிலாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

சூர்யா தான் இந்த படத்தை தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ராதாமோகனின் காற்றின் மொழி படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அடுத்ததாக அறிமுக இயக்குனரின் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

சூர்யாவின் NGKயை தயாரிக்கும் Dream Warrior Pictures தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பைப் தொடர்ந்து படத்தின் தலைப்பு, மற்ற கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!