அடுத்த பாசமலர்… விஸ்வாசம் படம் பற்றி கமெண்ட்

சென்னை:
விஸ்வாசம் படத்தை அனைவரும் அடுத்த பாசமலர் என்று சொல்றாங்க என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

அஜித்தின் விஸ்வாசம் படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ரஜினியின் பேட்டயுடன் வெளியானதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

அதையெல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக படம் இருந்ததால் விஸ்வாசம் படம் செம ஹிட் ஆகியுள்ளது. இப்படத்தை புகழ்ந்து பிரபலங்கள் பலரும் தங்களது பேட்டிகளில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை பற்றி பேசிய ராதா ரவி, இன்னும் விஸ்வாசம் படத்தை பார்க்கவில்லை. பலரும் படம் பார்த்துவிட்டு அடுத்த பாச மலர் என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் தியேட்டர் புல்லாக ஓடுகிறது என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!