அடுத்த வருடம் தன் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது

‘மெட்ராஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் யார் இவர் என்ற கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரித்விகா. அதன் பின் சில படங்களில் நடித்தாலும் ‘கபாலி’ படத்தில் மட்டுமே அவருக்கென பெயர் கிடைத்தது. தற்போது சில படங்களில் நடித்து வரும் ரித்விகா ‘பிக் பாஸ் 2’ வெற்றியாளர் பட்டத்தை கைப்பற்றினார்.

அதன்பின் அவரும் அடிக்கடி செய்திகளில் இடம் பெற ஆரம்பித்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரித்விகா, அடுத்த வருடம் தன் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ரித்விகா திருமணம் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்தன. திருமணத்திற்குப் பின் அவர் நடிக்க மாட்டார் என்றும் சிலர் செய்தி வெளியிட்டுள்ளது ரித்விகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது குறித்து டுவிட்டரில், “திருமணம் குறித்த கேள்விக்கு அடுத்த வருடம் நடக்க வாய்ப்புள்ளது என்றேன். அதை சரிவர அறியாமல் பத்திரிகைகள் திருமணத்திற்கு பின் நான் நடிப்பை தொடரப்போவதில்லை என்று சேர்த்து எழுதியிருப்பது வருத்தத்தை தருகிறது. திருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா? வருத்தம்,” எனப் பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!