அடையாளம் தெரியாமல் மாறிய 96 பட நடிகை

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷன் மகள் கௌரி கிஷன் என்பவர் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ராம்-ஜானு ஜோடிதான் ஹாட் டாபிக்காக இருந்து வந்தன.அதில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது.

அதிலும் குறிப்பாக பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.

இப்படத்தில் இவரின் நடிப்பு பலரை கவனம் ஈர்த்ததால் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அந்த புகைப்படத்தில் சற்று உடல் எடை கூடி பூசலாக தோற்றமளிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

Sharing is caring!