அட்லியின் இயக்கத்தில் ஷாருக் கான் – தீபிகா படுகோன்

கடந்த வருடம் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் IPL போட்டியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து பார்த்தார் இயக்குநர் அட்லி.

அதிலிருந்து ஷாருக் கானை அட்லி இயக்கவுள்ளார் என்று தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

விஜய் நடித்த பிகில் பட டிரெய்லரை ஷாருக் கான் ட்விட்டரில் வெளியிட்டார்.

இந்நிலையில், ஷாருக் கானை அட்லி இயக்கும் படம் குறித்த மேலதிகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லி இயக்கும் படத்தில் ஷாருக் கானுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் பிரபல நடிகை தீபிகா படுகோன்.

ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர் படங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.
இந்தப் படத்திற்கு சன்கி என தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடைசியாக, 2018 இல் ஷாருக் கான் நடிப்பில் ஷீரோ படம் வெளியானது. அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதன்பிறகு 2021 இல் அட்லி படத்தில் அவர் நடிப்பார் என அறியப்படுகிறது.

Sharing is caring!