அட்லீ மீது திட்டமிட்ட புகார்

விஜய் நடிப்பில் உருவாகி வருகின்ற தளபதி-63 படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரிய செட்கள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அட்லீ தன்னை தரக்குறைவாக நடத்தியதாக துணை நடிகை கிருஷ்ணதேவி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை சமீபத்தில் அளித்தார்.

ஆனால் இந்த புகார் திட்டமிட்டு அட்லீ மீது சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கிருஷ்ணதேவி அளித்துள்ள புகாரில் அட்லீ உதவியாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அட்லீயும் என திருத்தி எழுதப்பட்டுள்ளது. இந்த ஆதாரம் உண்மையில் கிருஷ்ணதேவி அளித்த புகார் தானா என்பதும் தெரியவில்லை. ஏனெனில் புகார் பற்றிய செய்திகள் நேற்று தான் வெளிவந்தன, ஆனால் இதில் ஏப்ரல் 16ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த புகார் குறித்து அட்லீ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!