அட்வைஸ் செய்தார் நித்யா… பதிலடி கொடுத்தார் மும்தாஜ்

சென்னை:
மும்தாஜிற்கு அட்வைஸ் செய்தார் நித்யா… இதனால் கொஞ்சம் கோபமடைந்தார் மும்தாஜ்.

நடிகை மும்தாஜ் தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பலருக்கும் பிடித்த போட்டியாளராக உள்ளார். இந்நிலையில் பாலாஜியை பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டுக்கு வந்த நித்யா மும்தாஜுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார்.

மற்றவர்களின் நெகடிவ் விஷயங்களை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளாதீர்கள் என்றார்.  அதற்கு பதிலடி கொடுத்த மும்தாஜ், “எனக்கு தெரிந்து நான் அப்படி செய்யவில்லை. என்ன செய்தேன் என சொல்லுங்கள்” என கேட்டார்.

அதற்கு நித்யா, “அது உங்களுக்கே தெரியும் யோசித்து பாருங்கள்” என கூற கொஞ்சம் கோபமானர் மும்தாஜ். “அது உங்களின் கருத்தாக இருக்கலாம். அதற்கு நான் எதுவும் செய்யமுடியாது” என்று பட்டென்று  கூறிவிட்டார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!