அதர்வா, மேகா ஆகாஷ் ரொமான்ஸ்…

அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து, யார் கண்ணன் இயக்கி தயாரிக்கும் ‘பூமராங்’ படத்தில் அதர்வா மேகா ஆகாஷ் ரொமான்டிக் பாடலை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

யார் கண்ணன் இயக்கி தயாரிக்கும் பூமராங் படத்தில், அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்.ஜே பாலாஜி, உபென் பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமராங் படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே, ட்ரெய்லர் மற்றும் ஒரு பாடல் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், ‘முகையாழி’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை ஆனந்த் அரவிந்த் கிருஷ்ணன் மற்றும் ராதிகா பாடியுள்ளனர். தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த பாடலை தனுஷ் பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Sharing is caring!