அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்டோர் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம்

தென்னிந்திய பிரபலங்களில் ட்விட்டரில் அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்டோர் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். 80 இலட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்கின்றனர்.

நடிகர், பாடகர், பாடலாசியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட நடிகர் தனுஷ், தென்னிந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் சினிமாவிலும் நடித்துவிட்ட தனுஷை தற்போது 80 இலட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

Sharing is caring!